சென்னையில் 3.5 கோடிக்கு 'போர்ஷே' கார் வாங்கிய நாக சைதன்யா | என் விருதுகள் சில என்னிடம் வரவேயில்லை : ஏஆர் ரஹ்மான் அதிர்ச்சித் தகவல் | ரூ.50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த குருவாயூர் அம்பலநடையில் | பெண் குழந்தைக்கு தாயான யாமி கவுதம் : குழந்தையின் பெயரையும் வெளியிட்டார் | நான்கே மாதத்தில் 1000 கோடி வசூல் : மலைக்க வைக்கும் மல்லுவுட் | பிரேம் நசீர் சாதனையை முறியடிங்கள் : மோகன்லாலுக்கு கமல் வாழ்த்து | சீரியலை விட்டு விலகிய வீஜே விஷால் - காரணம் இதுதானா? | ஜெய் ஆகாஷ் உடன் ஜோடி சேரும் ரேஷ்மா | தலைப்புக்கு தணிக்கை குழு எதிர்ப்பு : 'வடக்கன்' பட ரிலீஸ் தள்ளிவைப்பு | யோகி பாபு நடிக்கும் 'வானவன்' |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தனது 68வது படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மைக் மோகன், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், வைபவ் உள்ளிட்டோர் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
ஏற்கனவே இதன் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, டர்க்கி, ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது வருகிறது. இந்த நிலையில் ரசிகர்கள் மிக ஆவலோடு காத்திருந்த விஜய் 68 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது. அதில் ‛தி கிரேடஸ்ட் ஆப் ஆல் டைம்' என்ற ஆங்கில தலைப்புடன், விஜய் இருவிதமான கெட்அப்களில் வருவதுபோல் இடம்பெற்றுள்ளது. இப்போஸ்டர் விஜய் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.