தினமும் அதிகாலை 3 மணிக்கு திரிஷ்யம் கிளைமாக்ஸை எழுதினேன் : ஜீத்து ஜோசப் | நரேன் கார்த்திகேயன் பற்றிய பயோபிக் சினிமாவாகிறது | 'பராசக்தி' வெளியீடு தள்ளிப் போகவே வாய்ப்பு ? | ஹாலிவுட்டில் நடித்த முதல் இந்திய நடிகரின் வாழ்க்கை சினிமா ஆகிறது | தெலுங்கு காமெடி நடிகர் பிஷ் வெங்கட் காலமானார் | ரேக்ளா ரேஸ் பின்னணியில் உருவாகும் 'சோழநாட்டான்' | ஜோஷி, உன்னி முகுந்தன் இணையும் புதிய படம் அறிவிப்பு | பிளாஷ்பேக்: இயக்குனராக தோல்வி அடைந்த மோகன் | பிளாஷ்பேக்: எம்ஜிஆர் வாக்குப்படி முத்துலட்சுமிக்கு நடந்த திருமணம் | உண்மை சம்பவத்தை சொல்லும் போகி |
சென்னை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த, 26 வயது பெண், தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். அவர், அண்ணா நகர் காவல் நிலையத்தில், நவம்பரில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில் கூறியிருப்பதாவது: சமூக வலைதளம் வாயிலாக, நடிகர் விஜயின் கணக்காளர் எனவும், நடிகர் விஜயுடன் இருக்கும் புகைப்படங்களையும் பதிவிட்டு இருந்த, சென்னை கிண்டியை சேர்ந்த ராஜேஷ், 32 என்பவர், என் தோழி வாயிலாக பழக்கமானார். தனக்கு திருமணமானதை மறைத்த ராஜேஷ், என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், பல்வேறு காரணங்களை கூறி, 10 லட்சம் ரூபாய் வரை என்னிடம் வாங்கினார்.
திருமணமாகி, இரு குழந்தைகள் இருப்பது பற்றி கேட்டபோது என்னை மிரட்டினார். எனக்கு திருமண ஆசை காட்டி, பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதை படம் எடுத்தும் வைத்துள்ளார். ராஜேஷ் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறியிருந்தார்.
இதுகுறித்து அண்ணா நகர் மகளிர் போலீசார் விசாரித்து, ராஜேஷ் மீது, பெண்ணுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட இரு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஆனாலும் நீண்ட நாட்களாக ராஜேஷ் கைது செய்யப்படாததால், சில தினங்களுக்கு முன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், அப்பெண் சமீபத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் ராஜேஷ் இன்று கைது செய்யப்பட்டார்.