இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான திரிஷ்யம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது ஹிந்தி, சைனீஸ் ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் திரிஷ்யம் 2 என்கிற பெயரில் வெளியாகி கொரோனா காலகட்டத்தில் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகி முதல் பாகத்திற்கு கிடைத்த அதே வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இந்த படத்திற்கு மூன்றாம் பாகம் இருக்கிறது என்றும் இந்த மூன்றாம் பாகத்தோடு இந்த தொடர் முடிகிறது என்றும் ஜீத்து ஜோசப் கூறி வந்தார்.
அதற்கேற்றபடி வரும் அக்டோபர் மாதம் இந்த படத்தின் மூன்றாம் பாகம் துவங்க இருக்கிறது. மலையாளத்தில் மட்டுமல்லாது ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கி ஒரே சமயத்தில் மூன்று படங்களையும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். தற்போது ஜீத்து ஜோசப் மிராஜ் மற்றும் வலது வசத்தே கள்ளன் என இரண்டு படங்களை ஒரே சமயத்தில் மாற்றி மாற்றி இயக்கி வருகிறார்.
இந்த நிலையில் தான் சமீபத்திய நிகழ்வு ஒன்று கலந்து கொண்டு அவர் பேசும்போது, “திரிஷ்யம் படத்தின் முழு ஸ்கிரிப்டையும் எழுதி முடித்து விட்டேன். அதிலும் கிளைமாக்ஸை எழுதுவது எனக்கு மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் மிகப்பெரிய அளவில் அழுத்தத்தை தந்தது. இந்த இரண்டு படங்களின் வேலைகள் தொடர்ந்து இருந்ததால் தினசரி அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து இந்த படத்தின் ஸ்கிரிப்ட் மற்றும் கிளைமாக்ஸ் ஆகியவற்றை எழுதி முடித்தேன். வரும் அக்டோபரில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும்” என்று கூறியுள்ளார்.