மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
ரஜினிகாந்த் தற்போது 'வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை 'ஜெய்பீம்' படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்குகிறார். போலீ என்கவுண்டர் பற்றிய படமாக தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
திருவனந்தபுரத்தில் தொடங்கி மும்பை, சென்னை, திருநெல்வெலி, நாகர்கோவில், உள்ளிட்ட இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது கன்னியாகுமரியில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரி சென்ற ரஜினிகாந்த், விஜயகாந்த் மரணத்தால் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு சென்னை திரும்பி விட்டார்.
இந்த நிலையில் ரஜினிகாந்த், பகத் பாசிலுடன் நடிக்கும் காட்சிகள் லீக் ஆகியுள்ளது. இதனால் படப்பிடிப்பு குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். படக்காட்சிகள் வெளியாகாமல் இருக்க செல்போனுக்கு தடை விதித்துள்ளனர். வெளியாட்களையும் உள்ளே அனுமதிக்கவில்லை. ஆனால் பாதுகாப்பையும் மீறி கன்னியாகுமரியில் ரஜினிகாந்த், பகத் பாசில் ஆகியோர் பங்கேற்று நடித்த காட்சி இணைய தளத்தில் கசிந்துள்ளது. படக்காட்சியை கசிய விட்டது யார் என்று விசாரணை நடக்கிறது.