நான் ஒரு சீரியல் டேட்டர் : தனிப்பட்ட வாழ்க்கை பற்றி ‛ஓப்பனாக' பேசிய ரெஜினா | விஜய்யின் கடைசி படம்: நாளைதான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ராதிகாவுடன் விராட் கோலி எடுத்த செல்பி | 'வணங்கான்' படத் தலைப்பு விவகாரம்: உயர்நீதிமன்றம் நோட்டீஸ் | அடுத்தடுத்து விலையுர்ந்த சொகுசு கார்களை வாங்கிய அஜித் | மற்ற மொழித் தயாரிப்பாளர்களுக்கு ஆதரவு தரும் ஹீரோக்கள் | பிளாஷ்பேக் : நெருடலான கதையை நேர்த்தியாய் சொல்லி, நெஞ்சம் நிறையச் செய்த 'சாரதா' | சீரியலை விட்டு விலகிய சாய் காயத்ரி: சோகத்தில் ரசிகர்கள் | பிறந்தநாள் கொண்டாடிய திவ்யா கணேஷ்! குவியும் வாழ்த்துகள் | அஷ்வத் - கண்மணி ஹல்தி புகைப்படங்கள் வைரல்! |
தமிழ் சினிமாவில் நடிகர்கள் ரஜினி, கமலுக்கு இணையாக முன்னணி நடிகராக கோலோச்சியவர் நடிகர் விஜயகாந்த். அதன்பிறகு அரசியலிலும் மிகப்பெரிய அளவில் ஏற்றம் கண்ட விஜயகாந்த், பின்னர் அவரது உடல்நல குறைபாடு காரணமாக கடந்த பல வருடங்களாக அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று மரணத்தை தழுவினார். தமிழக மக்களும் அவருக்கு தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். விஜயகாந்த்தை பொருத்தவரை எப்போதுமே புது முயற்சிகளுக்கு முதல் ஆளாக ஊக்கம் கொடுக்கக் கூடியவர் என்கிற பெயரை பெற்றவர்.
குறிப்பாக திரைப்படக்கல்லூரி மாணவர்களை தமிழ் திரையுலகம் பாராமுகம் காட்டி ஒதுக்கியபோது அவர்களது படங்களில் நடித்து அவர்களுக்கென சினிமாவில் ஒரு மிகப்பெரிய பாதையை போட்டு தந்தவர் விஜயகாந்த் தான். அதேபோல மலையாள திரை உலகில் இருந்து தமிழில் படம் இயக்குவதற்காக இயக்குனர் ஷாஜி கைலாஷ் தமிழ் சினிமாவுக்கு வந்தபோது தன்னுடைய சொந்த தயாரிப்பில் அவரை படம் இயக்க வைத்து தானே ஹீரோவாக நடித்தார் விஜயகாந்த். அந்தப் படம் தான் வாஞ்சிநாதன்.
அந்த படத்தில் விஜயகாந்த் உடன் பணியாற்றிய அனுபவம் குறித்து இயக்குனர் ஷாஜி கைலாஷ் தற்போது நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, “ஒரு உண்மையான மனிதன் நம்மை விட்டுக் போய்விட்டார் வாஞ்சிநாதன் படப்பிடிப்பின்போது அவர் உண்மையிலேயே மிகப்பெரிய இதயம் கொண்டவராக காட்சியளித்தார். அவர் ஒரு சூப்பர் ஸ்டார் என்பதையும் தாண்டி கொண்டாடப்பட வேண்டிய ஒரு நல்ல மனிதர். ஒரு நடிகர் என்பதையும் தாண்டி சினிமாவில் அவர் ஒரு நல்ல திறமையான மாணவர் என்று சொல்லலாம்.
வாஞ்சிநாதன் படப்பிடிப்பு தளத்தில் விஜயகாந்த் சாருடன் கழித்த ஒவ்வொரு நாளுமே உண்மையிலேயே அற்புதமாக இருந்தது. அவருடைய விருந்தோம்பல் தான் அனைத்திலுமே ஹைலைட்டாக இருக்கும். தமிழ் சினிமாவில் ஒரு முதல் இயக்குனராக நான் நுழைந்தாலும் எனக்கு மிகப்பெரிய அளவில் அவரது சொந்த சகோதரன் போல மரியாதை கொடுத்தார். அவரை இழந்து வாட்டும் அவரது குடும்பத்திற்கும் அவரது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்” என்று கூறியுள்ளார்.