2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

விக்ரம், பசுபதி மாளவிகா மோகனன் நடிப்பில் தங்கலான் என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார் ரஞ்சித். இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்துள்ளார் ரஞ்சித். அந்த சந்திப்பின்போது அம்பேத்கர் தன்னுடைய மனைவிக்கு எழுதிய காதல் கடிதங்கள் கொண்ட புத்தகத்தை அவர் பரிசாக வழங்கி உள்ளார். அந்த புகைப்படத்தை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ரஞ்சித். அதோடு, எண்ணமெல்லாம் வண்ணமம்மா என்ற ஒரு கேப்சனையும் கொடுத்துள்ளார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பாக தெரிந்தாலும் ரஞ்சித் அடுத்து இயக்கும் படத்திற்கு இளையராஜா இசையமைக்க போகிறார். அதற்கான சந்திப்பே இது என்று கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.