காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் |
லியோ படத்தை அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் 171வது படத்தை இயக்கப் போகிறார் லோகேஷ் கனகராஜ். இந்நிலையில் தற்போது ரஜினி படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணிகளில் அவர் முழு வீச்சில் இறங்கியுள்ளார். அதன் காரணமாகவே அனைத்து விதமான சமூக வலைதள பக்கங்களில் இருந்து சிறிது காலம் தான் பிரேக் எடுத்துக் கொள்வதாக அவர் தெரிவித்திருக்கிறார். அதனால் சில காலம் தன்னை யாரும் தொடர்பு கொள்ள முடியாது என்றும் தெரிவித்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
மேலும், தற்போது ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தோடு அப்படத்தின் படப்பிடிப்பை முடித்து விடுவார். அதனால் அவரது 171வது படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ்.