போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் துருவ நட்சத்திரம், பா.ரஞ்சித் இயக்கத்தில் நடித்துள்ள தங்கலான் ஆகிய இரண்டு படங்களும் ரிலீஸ்க்கு தயாராகி வருகின்றன. இந்த படங்களை தொடர்ந்து சித்தார்த் நடித்த சித்தா படத்தை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் விக்ரம். அவரது 62வது படமாக உருவாகும் இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் படப்பிடிப்பு தொடங்குகிறது.
மேலும் சித்தா படத்தை போலவே இந்த படமும் ஒரு வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் நிலையில் இப்படத்திற்காக உடல் ரீதியாக தன்னை தயார்ப்படுத்திக் கொண்டு வருகிறார் விக்ரம். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.