லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த பாலா, குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பெரிய அளவில் பிரபலமாகி விட்டார். சினிமாவிலும் பிஸியாக நடித்து வருகிறார். கோஷ்டி, ரன் பேபி ரன், தில் இருந்தா போராடு உட்பட பல படங்களில் நடித்தவர் தற்போது அரை டஜன் படங்களுக்கு மேல் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் சினிமா - சின்னத்திரையில் தான் சம்பாதிக்கும் பணத்தை வைத்து சமூக சேவைகளிலும் அவர் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் ஏற்கனவே மலை கிராமங்களில் வாழும் மக்கள் மற்றும் முதியோர் இல்லம், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு இதுவரை நான்கு ஆம்புலன்ஸ்களை வாங்கி கொடுத்துள்ளார் பாலா. இந்த நிலையில் சமீபத்தில் சென்னை நகரம் மழையில் தத்தளித்தபோது வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, மூன்று லட்சத்துக்கு மேல் பண உதவிகளையும், அடிப்படை தேவைகளையும் செய்து கொடுத்தார் பாலா. இதன் காரணமாக கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் கூட பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்யாத நிலையில், சில ஆயிரங்களில் சம்பளம் வாங்கும் ஒரு நடிகர் இப்படி உதவி செய்கிறாரே என்று பலரும் அவரது செயல்பாட்டை பாராட்டினார்கள்.
இந்த நிலையில், தற்போது நடிகர் பாலா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டு உள்ளார். அதில், அவரது கை விரலில் கட்டுப் போடப்பட்டுள்ளது. அதோடு, மனம் நிறைந்தது, விரல் உடைந்தது நன்றி என அவர் பதிவிட்டுள்ளார். அதாவது மழை நிவாரண பணிகளில் ஈடுபட்டிருந்த போது, அவரது கைவிரலில் அடிபட்டுதான் கட்டு போட்டு இருக்கிறார் என்பதை அவர் பதிவிட்டுள்ள வாசகத்தில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது.