பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் தங்கலான். இப்படத்தின் டீசர் வெளியான போது, டீசர் இசை மற்றும் படத்தின் பின்னணி இசையும் மிகச் சிறப்பாக இருப்பதாக ஜி.வி.பிரகாஷை பாராட்டினார் விக்ரம். இந்நிலையில் அடுத்து அருண்குமார் இயக்கும் தனது 62வது படத்திற்கும் நீங்கள்தான் இசையமைக்க வேண்டும் என்று சொல்லி ஜி.வி.பிரகாஷை அப்படத்தில் இணைத்துள்ளார் விக்ரம். இப்படி விக்ரமே தன்னை பாராட்டியதோடு நில்லாமல் புதிய படத்துக்கும் ஒப்பந்தம் செய்திருப்பதால் உற்சாகத்தில் இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். மேலும், தங்கலான் படத்திற்க்கு முன்பே ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் நடித்த தெய்வத்திருமகள், தாண்டவம் போன்ற படங்களுக்கும் ஜி.வி .பிரகாஷ் தான் இசை அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.