'நந்தி விருதுகள்' பெருமையை மீட்க விரும்பும் ஆந்திரா | சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல் | நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான 'லியோ' படம் மீது கலவையான விமர்சனங்களே வெளிவந்தன. குறிப்பாக இடைவேளைக்குப் பின் படம் சிறப்பாக இல்லை என்பதே பலரது கருத்தாக இருந்தது. அதைத் தற்போது ஏற்றுக் கொண்டுள்ளார் லோகேஷ்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் அதற்கான காரணம் வெளியீட்டுத் தேதி குறித்த அழுத்தம்தான் என்றும் சொல்லியிருக்கிறார். “இனிமேல் நான் முடிவு பண்ணி வச்சிருக்கிறது, இந்த ரிலீஸ் டேட் போடாம படம் பண்ணணும்கறது. நானே எனக்கு வச்சிக்கிட்ட ஒரு கொள்கை. கொஞ்சம் டைம் தேவைன்னு நினைக்கிறேன். லியோல செகண்ட் ஹாப்ல இருக்கிற பிரச்சினைகள்னு சிலர் சொல்லிக்கிட்டிருந்தாங்க. அதை, நான் ஏத்துக்கறேன். அது மாதிரி எதுவும் ஆகிடக் கூடாதுங்கறதால இன்னும் கவனமா இருப்பேன்.
ரிலீஸ் டேட் பிரஷர் இல்லாம பண்ணணும். நாம முடியாதுன்னு சொன்னால் யாரும்கேட்கப் போறதில்ல. நாம ஒரு தைரியத்துல போயிடறோம். ஒரு பெரிய படத்தை எடுக்கும் போது பத்து மாசத்துக்குள்ள எல்லாத்தையும் முடிக்கணும்கறது வந்து, அந்த மாசம் என்ன ஆச்சுனே தெரியாது. திரும்பிப் பார்த்தால் என்ன ஆச்சுனு தெரியாது. திரும்பிப் பார்த்தால் கடந்த நாலு வருஷம் அப்படிதான் ஆகியிருக்கு. என்ன பண்றோம்னே தெரியாம போகுது. அவ்வளவு வேகம் தேவையில்லன்னு நினைக்கிறேன்,” எனப் பேசியுள்ளார்.