நடிகை ஹனிராஸ் மீது அவதூறு பரப்பிய மீடியா ஆர்வலருக்கு ஜாமீன் மறுப்பு | நடிகையை உருவ கேலி செய்த இயக்குனர் : பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் | சரத்குமார் நடிக்கும் ஏழாம் இரவில் | தாராவியில் பொங்கல் கொண்டாடிய ஓவியா | பாடலாசிரியர் அவதாரம் எடுத்த விஜய் சேதுபதி! | தக் லைப் படத்தின் தெலுங்கு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! | அகண்டா 2ம் பாகம் படப்பிடிப்பு இன்று துவங்கியது! | 'இட்லி கடை' படத்தில் நித்யா மேனன் பர்ஸ்ட் லுக் வெளியானது! | கமர்ஷியல் படங்களில் உச்சம் தொடுவேன் - திரைப்பட ஒளிப்பதிவாளர் செழியன் | மூன்று மாதம் வெயிலில் நின்று கறுப்பானேன் - 'கொட்டுக்காளி' சாய் அபிநயா |
சமீபத்தில் தெலுங்கு திரையுலகில் ஜூனியர் நடிகை ஒருவர் புஷ்பா படத்தில் நடித்து புகழ்பெற்ற ஜெகதீஷ் பிரதாப் பந்தாரி என்பவரால் தொடர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி அதை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். இதை தொடர்ந்து நடிகர் ஜெகதீஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கு திரையுலக பிரபலங்களிடம் இருந்து பெரிய அளவில் இந்த சம்பவத்திற்கு ரியாக்சன் எதுவும் வெளிப்படவில்லை. அதே சமயம் இதுபோன்று பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும்போது முதல் நபராக குரல் கொடுப்பவர் பின்னணி பாடகி சின்மயி. இறந்து போன ஜூனியர் நடிகை மரணம் குறித்து சின்மயி தனது சோஷியல் மீடியா பக்கத்தில் காட்டமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறும்போது, “நாட்டின் முதல் திரைப்பட அமைப்புகளில் பாலியல் துன்புறுத்தல் நிவர்த்திக் குழுவைக் கொண்ட அமைப்பு தெலுங்கு பிலிம் சேம்பர். இறந்துபோன அந்த பெண்ணுக்கு அவளுக்கான உரிமைகள் பற்றி தெரிந்திருந்தால், அவளுக்கு சட்டரீதியான உதவி கிடைத்து இருந்தால், அவள் பயப்பட வேண்டி இருந்திருக்காது. தான் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று உணர்ந்திருப்பாள். ஒரு பெண்ணை பிளாக்மெயில் செய்வது எளிது என ஒருவன் நினைத்ததால் இன்று ஒரு பெண் இறந்திருக்கிறாள். ஏனென்றால் நமது சமூகம் பெண்களின் கவுரவம் அவளது உடலில் தான் இருக்கிறது என்று சொல்லி வைத்திருக்கிறது. இன்னும் இந்த வழக்கு பல வருடங்கள் நடக்கும். அந்த மனிதன் நாளை ஜாமீன் கிடைத்து வெளியே வரத்தான் போகிறான். உங்களுக்குத்தான் தெரியுமே இந்திய சட்ட அமைப்பை பற்றி” என்று தன்னுடைய கோபத்தையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.