பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்த படம் 'லியோ'. பான் இந்தியா படமாக ஐந்து மொழிகளில் இப்படம் தியேட்டர்களில் வெளியானது. 600 கோடிக்கும் அதிகமாக வசூலைக் குவித்த இப்படம் கடந்த மாதம் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. தமிழை விடவும் மற்ற மொழிகளிலும் இப்படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்ததாகச் சொன்னார்கள்.
நல்ல வரவேற்பு கிடைத்ததால் உலகம் முழுவதும உள்ள ரசிகர்களைக் கவரும் விதத்தில் படத்தின் ஆங்கில டப்பிங்கை வெளியிடப் போவதாக படத்தை ஓடிடியில் வெளியிட்ட நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. அதன்படி தற்போது ஆங்கில டப்பிங்கை புதிதாகச் சேர்த்துள்ளார்கள். இருந்தாலும் விஜய்க்கு பொருத்தமான குரல் தேர்வு இல்லாததால் ரசிக்க முடியவில்லை.
மற்ற கதாபாத்திரங்களுக்கான பின்னணிக் குரல்கள் பொருத்தமாக இருக்கிறது. ஆனால், கதாநாயகன் விஜய்க்கு மட்டும பொருத்தமான பின்னணிக் குரலைத் தேர்வு செய்யாமல் விட்டுவிட்டார்கள்.