'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
சினிமா டிஜிட்டலுக்கு மாறிய பின்பு கடந்த 20 வருடங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களை தற்போதைய டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றி வரும் போக்கு அதிகரித்துள்ளது. அந்த வகையில் 1995ல் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், மீனா, சரத் பாபு நடிப்பில் வெளியான முத்து திரைப்படமும் தற்போது டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
முத்து பட ரிலீஸ் சமயத்தின் போது இருந்த அதே வரவேற்பு இப்போது இந்த படத்தின் ரீ ரிலீஸுக்கும் கிடைத்து வருகிறது. இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சியை சென்னையில் உள்ள ரோகிணி தியேட்டரில் படத்தின் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார், கதாநாயகி மீனா உள்ளிட்டோர் ஒன்றாக அமர்ந்து ரசிகர்களுடன் பார்த்து ரசித்தனர். இந்த நிகழ்வின் போது ரசிகர்களுடன் பேசிய கே.எஸ் ரவிக்குமார் அடுத்ததாக படையப்பா திரைப்படத்தையும் டிஜிட்டலுக்கு மாற்றி ரீ ரிலீஸ் செய்ய இருப்பதாக கூறி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.