சினிமாவுக்கு முழுக்கு போடுகிறாரா த்ரிஷா... | பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் | விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி | லூசிபர் 2ம் பாகத்தின் டீசர் அப்டேட் | பிறந்தநாளில் பிரமாதம்: உடல் உறுப்புகளை தானம் செய்தார் டி.இமான் | கும்பமேளாவில் பாசி மணி ஊசி விற்றவர் : சினிமா நடிகை ஆகிறார் மோனலிசா | பிளாஷ்பேக் : கடைசி வரை அப்பா, தாத்தாவாக நடித்த வி.எஸ்.ராகவன் | துணை நடிகர் ஜெயசீலன் காலமானார் | பிளாஷ்பேக் : தேசிய விருதை இழந்த மீனா | விஷால் உடல்நலம் குறித்து அவதூறு : 3 யு-டியூப் சேனல்கள் மீது வழக்கு |
ரஜினிகாந்த் நடிக்கும் மூன்று புதிய படங்கள் அடுத்த ஆண்டில் அடுத்தடுத்து வெளியாக வாய்ப்புள்ளது. முதலில் பொங்கலுக்கு 'லால் சலாம்' படமும், அடுத்து கோடை விடுமுறையில் 'ரஜினி 170' படமும், தீபாவளி அல்லது அதற்குப் பிறகு 'ரஜினி 171' படமும் வெளியாகலாம்.
ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள 'லால் சலாம்' படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. அதனால், வரும் டிசம்பர் 12ம் தேதி ரஜினியின் பிறந்தநாளன்று அப்படத்தின் அடுத்த அப்டேட் ஒன்று வெளியாக வாய்ப்புள்ளது.
அடுத்து த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் அவருடைய 170 படத்தின் முதல் பார்வை படத்தின் தலைப்புடன் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை விட வேறு சிறந்த நாள் எதுவும் இருக்க முடியாது என ரசிகர்கள் அந்த அப்டேட்டை எதிர்பார்க்கிறார்கள்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ள 171வது படம் பற்றிய அப்டேட் மட்டும் வர வாய்ப்பில்லை என்று தெரிகிறது.