2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த வாரம் வெளியான படங்கள் வசூலில் மோசமான பாதிப்பை சந்தித்தன. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்னும் பல தியேட்டர்கள் திறக்கப்படாமல் தான் உள்ளன. அப்படியே திறக்கப்பட்ட தியேட்டர்களிலும் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் நாளை டிசம்பர் 8ம் தேதி வெள்ளிக்கிழமை 3 படங்கள் மட்டும் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. “கான்ஜுரிங் கண்ணப்பன், கட்டில், தீ இவன்,” ஆகிய நேரடி தமிழ்ப் படங்கள் நாளை வெளியாகின்றன. இவற்றோடு சென்னை பின்னணியில் எடுக்கப்பட்ட மலையாளப் படமான 'ரஜ்னி' என்ற படம் 'அவள் பெயர் ரஜ்னி' என்ற பெயரில் தமிழில் டப்பிங் ஆகி வெளியாகிறது.
மற்றும் நானி நடித்துள்ள 'ஹாய் நான்னா' தெலுங்குப் படம் தமிழிலும் டப்பிங் ஆகி இன்று வெளியாகிறது.