காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
பாலிவுட் நடிகரான அமீர் கானின் அம்மா சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். அதற்காக அவர் கடந்த சில வாரங்களாக சென்னையிலேயே தங்கியுள்ளார். அவர் நடிகர் விஷ்ணு விஷால் வீட்டில் கடந்த சில நாட்களாகத் தங்கியுள்ளதாகத் தெரிகிறது.
சென்னையில் உள்ள காரப்பாக்கத்தில் இருக்கும் தன் வீட்டிலிருந்து விஷ்ணு விஷால் வெள்ளத்தில் சிக்கியிருப்பதாக காலையில் டுவீட் செய்திருந்தார். அதன்பிறகு அவரை மீட்புப் படையினர் மீட்டனர். விஷ்ணு விஷால், அவரது மனைவி ஜுவாலா கட்டா மற்றும் அமீர் கான் உள்ளிட்டவர்கள் அப்போது மீட்கப்பட்டனர்.
தீயணைப்புப் படையினர் மீட்புக் குழுவினர் ஆகியோருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்து விஷ்ணு விஷால் தான் மீட்கப்பட்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.