ஆண்ட்ரியா நடிப்பில் மிஷ்கின் இயக்கியுள்ள பிசாசு 2 படம் இன்னும் திரைக்கு வராத நிலையில், தற்போது விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் ட்ரெயின் படத்தை தொடங்கி இருக்கிறார். எஸ்.தாணு இந்த படத்தை தயாரிக்கிறார். முழுக்க முழுக்க ட்ரையின் பயணத்தின்போது நடக்கும் ஒரு திரில்லர் சம்பவத்தை மையமாகக் கொண்ட கதையில் இந்த படம் உருவாகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் டிம்பிள் ஹயாதி, வினய் ராய், பாவனா, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். டெவில் படத்திற்கு பிறகு மீண்டும் இப்படத்திற்கு இசையமைக்கிறார் மிஷ்கின்.
இந்த நிலையில் ட்ரெயின் படத்தில் இயக்குனர் வெற்றிமாறன் ஒரு கெஸ்ட் ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அமீர் உள்ளிட்ட சில இயக்குனர்கள் நடிக்க அழைத்த போது தனக்கு நடிப்பு செட்டாகாது என்று மறுத்த வந்த வெற்றிமாறன், இந்த படத்தில் மிஷ்கினின் வற்புறுத்தல் காரணமாக நடிப்பதற்கு ஒத்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.