மோகன்லால் மகனை இயக்கும் பிரம்மயுகம் இயக்குனர் | ரூ.125 கோடி வரி கட்டிய அமிதாப்பச்சன் | விஜய் சேதுபதியை இயக்கப் போகும் பூரி ஜெகன்னாத்? | ரஜினி சந்திப்பு பற்றி பிருத்விராஜ் நெகிழ்ச்சி | 700 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'அரபிக் குத்து' | அனுஷ்கா, விக்ரம் பிரபு நடிக்கும் 'காட்டி' தள்ளிப் போகிறதா ? | நம்ம ஊரு கலரே மாநிறம் தானே : ஐஸ்வர்யா ராஜேஷ் கொடுத்த பதில் | குட் பேட் அக்லி படத்தில் கெஸ்ட் ரோலில் சிம்பு? | வள்ளியின் வேலன் தொடரில் கவர்னர் வேடத்தில் இனியா | கேன்சரா... : வதந்திக்கு மம்முட்டி தரப்பு மறுப்பு |
90களில் டி ராஜேந்தர் படங்கள் மூலமாக வில்லன் நடிகராக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் பப்லு என்கிற பிருத்திவிராஜ். அதை தொடர்ந்து சின்னத்திரை சீரியலில் நடித்த இவர் ஒரு ரியாலிட்டி ஷோவில் சிம்புவுடன் முரண்பட்டது மிகப்பெரிய விஷயமாக பேசப்பட்டது. தற்போது மீண்டும் தனது அடுத்த இன்னிங்ஸில் நடிக்க துவங்கியிருக்கும் பப்லு சமீபத்தில் வெளியாகியுள்ள அனிமல் என்கிற ஹிந்திப்படத்தில் நடித்துள்ளார்..
அதே சமயம் இன்னொரு பக்கம் ஆறுமுக குமார் டைரக்ஷனில் விஜய்சேதுபதி நடித்து வரும் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் பப்லு நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து படக்குழுவினர் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் விஜய்சேதுபதியுடன் உள்ளார் பப்லு பிருத்திவிராஜ்.
இந்த புகைப்படம் வெளியான மறுநாளே தாணு தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய படமான ட்ரெயின் படத்தில் நடிக்கும் நடிகர்களும் அறிவிக்கப்பட்டனர். இந்த பட்டியலிலும் பப்லு இடம்பிடித்துள்ளார். இதையடுத்து இந்த படங்கள் மூலம் பப்லு பிருத்திவிராஜ் திரையுலகில் மீண்டும் புதிய இன்னிங்க்ஸில் தனது பயணத்தை வெற்றிகரமாக தொடர்வார் என எதிர்பார்க்கலாம்.