ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
கொரோனோ காலகட்டத்தில் ஓடிடி நிறுவனங்கள் அபரிமிதமான வளர்ச்சியைப் பெற்றன. முன்னணி நடிகர்கள் படங்களின் ஓடிடி உரிமைகளைப் பெற அந்நிறுவனங்களுக்கு இடையில் கடும் போட்டி நிலவும். ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்கள் 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடி தளங்களில் வெளியாகின்றன.
வட இந்தியாவில் உள்ள மல்டிபிளக்ஸ் நிறுவனங்கள் அதற்குக் குறைவான வாரங்களில் ஓடிடியில் வெளியாகும் படங்களை அவர்களது தியேட்டர்களில் திரையிட அனுமதிப்பதில்லை. சமீபத்தில் தமிழில் வெளிவந்த 'லியோ' படம் அதனால்தான் வட இந்தியாவில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் வெளியாகவில்லை.
இந்த வாரம் வெளியாக உள்ள ஹிந்திப் படமான 'அனிமல்' படமும் ஓடிடி தளத்தில் 8 வாரங்களுக்குப் பிறகே வெளியாக உள்ளது. ஹிந்திப் படங்கள் 8 வார இடைவெளியைப் பின்பற்றுவதைப் போல தமிழ்படங்களும் பின்பற்றுவார்களா என இங்குள்ள தியேட்டர்காரர்கள் எதிர்பார்க்கிறார்கள். நான்கு வாரங்களுக்குள் வெளியாவதால்தான் தமிழ்ப் படங்களைப் பார்க்க தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வருவதில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
நான்கு வாரத்தில் ஓடிடியிலேயே பார்த்துக் கொள்ளலாம் என பெரும்பாலான குடும்பத்தினர் நினைப்பதால்தான் தற்போது வார நாட்களில் பல தியேட்டர்களில் காட்சிகள் ரத்தாகும் நிலை உள்ளது என்றும் அவர்கள் கொந்தளிக்கிறார்கள். தியேட்டர்காரர்கள் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தால் மட்டுமே 4 வாரங்கள் என்பது 8 வாரங்களாக மாறும்.