இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

கடந்த 2014 ல் ஹிந்தியில் வெளியாகி அதிரடி வெற்றி பெற்ற படம் 'மர்தாணி'. பெண்களை மையப்படுத்தி அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி இருந்த இந்த படத்தில் கதாநாயகியாக ராணி முகர்ஜி நடித்திருந்தார். பிரதீப் சர்கார் இயக்க, இதன் கதையை கோபி புத்ரன் என்பவர் எழுதியிருந்தார்.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் மர்தாணி-2 என்கிற பெயரில் 2019ம் வருடம் வெளியானது. இதிலும் ராணி முகர்ஜியே கதாநாயகியாக நடித்தார். முதல் பாகத்திற்கு கதை எழுதிய கோபி புத்ரனே இந்த இரண்டாம் பாகத்திற்கு கதை எழுதியதுடன் அவரே இந்த படத்தை இயக்கவும் செய்தார். இந்த படமும் முதல் பாகத்தை போல வெற்றி பெற்றது.
தற்போது இந்த படத்தின் மூன்றாம் பாகம் உருவாகிறது என்கிற தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான கதையை இயக்குனர் கோபி புத்ரனே தற்போது எழுதி வருகிறார். இதிலும் ராணி முகர்ஜி கதாநாயகியாக நடிக்க, பிரபல தயாரிப்பாளரும் மற்றும் ராணி முகர்ஜியின் கணவருமான ஆதித்யா சோப்ராதயாரிக்க இருக்கிறார். இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.