இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

சமீபகாலமாக ஏஐ தொழில்நுட்பத்தை கொண்டு 'டீப்பேக்' எனப்படும் போலி வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. ராஷ்மிகா, கத்ரீனா கைப், கஜோல், சாரா டெண்டுல்கர், டி.வி நடிகைகள் ஜன்னத் ஜூபர், அனுஷ்கா சென் ஆகியோரை ஆபாசமாக சித்தரித்து வீடியோக்கள் வெளியானது. இந்த வீடியோக்கள் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு மிக நேர்த்தியாக இருப்பதால் நடிகைகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசு இதனை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் நடிகை ஆலியா பட்டை ஆபாசமாக சித்தரித்து வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் அரைகுறை ஆடை அணிந்த ஒரு பெண் ஆபாசமான உடல் அசைவுகளை வெளிப்படுத்துகிறார். அவரது முகத்திற்கு பதிலாக ஆலியா பட்டின் முகம் பொருத்தப்பட்டு வீடியோ வெளியாகி உள்ளது. இது பாலிவுட்டில் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.