பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
கடந்த 2001ம் ஆண்டில் கமல்ஹாசன் நடிப்பில் திரைக்கு வந்த படம் ஆளவந்தான். கமல்ஹாசன் கதை, திரைக்கதை, வசனம் எழுதிய இந்த படத்தை சுரேஷ்கிருஷ்ணா இயக்கி இருந்தார். இந்த நிலையில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அப்படம் டிசம்பர் 8ம் தேதி 1000 திரையரங்குகளில் மீண்டும் வெளியாகிறது.
இந்த படத்தில் இடம்பெற்றுள்ள கடவுள் பாதி மிருகம் பாதி என்ற பாடல் ஏற்கனவே வெளியான நிலையில், ஆயிரம் சூரியன் போல் வந்தான் ஆளவந்தான் என்ற பாடல் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பாடலும் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. குறிப்பாக இப்படம் 2001ம் ஆண்டு திரைக்கு வந்த போது பெரிய அளவில் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில், இந்த முறை இளவட்ட ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடுவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் ஆளவந்தான் படத்தை வெளியிடுகிறார்கள்.