பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
விஜய் நடித்த லியோ படத்தை அடுத்து ரஜினியின் 171வது படத்தை இயக்குவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இந்நிலையில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி உள்ள பார்க்கிங் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டார் லோகேஷ் கனகராஜ்.
அப்போது அவர் பேசுகையில், இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கரை என் படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்பது எனது மிகப்பெரிய ஆசையாகும். அந்த ஆசை சீக்கிரமே நிறைவேறும் என்று நினைக்கிறேன் என பேசினார். அதையடுத்து எம்.எஸ்.பாஸ்கர் பேசும்போது, நீங்கள் விஜய்யை வைத்து இரண்டு படங்களை இயக்கி உள்ளீர்கள். என்னைவிட வயதில் சிறியவராக இருந்தாலும் குறுகிய காலத்தில் பெரிய அளவில் புகழடைந்து விட்டீர்கள். இன்னும் பெரிய உயரத்துக்கு செல்வீர்கள். உங்கள் படத்தில் நடிப்பதற்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது என்று சொன்னால் உடனே ஓடி வந்து நடிக்கிறேன் என்று பேசினார் எம்.ஸ்.பாஸ்கர்.