போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் கடந்த பல வருடங்களாகவே உடல்நலமின்றி இருக்கிறார். கடந்த 18ம் தேதி நுரையீரலில் சளி மற்றும் இருமல் தொந்தரவு காரணமாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 6 நாட்களாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். வழக்கமான சிகிச்சை பெற்று வருவதாக விஜயகாந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தொடர் சிகிச்சை காரணமாக விஜயகாந்த் பற்றி தவறான வதந்திகள் பரவி வந்தது. இதை தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் ஒரு அறிக்கை வெளியிட்டது.
அதில் கூறப்பட்டிருப்பதாவது: நடிகர் விஜயகாந்த், காய்ச்சல் காரணமாக கடந்த 18ம் தேதி மியாட்-ல் அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சைக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு தருகிறார். அவர் உடல்நிலை சீராக உள்ளது. அனைத்து உடல் செயல்பாடுகளும் நிலையாக உள்ளது. இன்னும் சில நாட்கள் கண்காணிப்புக்கு பிறகு அவர் வீடு திரும்பி, தனது வழக்கமான நடவடிக்கைகளை தொடங்குவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.