2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் தனது 62வது படமான 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு அஜர்பைஜானில் ஒரு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து அரபு நாடுகளிலும் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
சமீபத்தில் அஜித்தின் அடுத்த படமான 63வது படத்தை மார்க் ஆண்டனி பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார் என தகவல் வெளியானது. தற்போது இந்த படத்தை பிரபல தெலுங்கு பட நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.