‛‛நாங்கள் பரம எதிரிகள் கிடையாது. ஆனால்...'': தனுஷ் பற்றி மனம்திறந்த நயன்தாரா | 5 மொழிகளில் வெளியாகும் அய்யப்பன் படம் | பிளாஷ்பேக் : மோகனை முழுமையான ஹீரோவாக்கிய 'கிளிஞ்சல்கள்' | சீரியல் நடிகை கீதாஞ்சலிக்கு ஆண் குழந்தை! குவியும் வாழ்த்துகள் | புஷ்பா 2 - தமிழகத்தில் 50 கோடி வசூல் | தன் மீதான வழக்கை ரத்து செய்ய அல்லு அர்ஜுன் மனு | பிளாஷ்பேக் : அன்புள்ள ரஜினிகாந்த் | திரைப்பட கூட்டமைப்பின் துணை தலைவராக ஐசரி கணேஷ் தேர்வு | சீனு ராமசாமி மனைவியை பிரிவதாக அறிவிப்பு | சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் - சாய் பல்லவி கோபம் |
ரவிக்குமார் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்கும் படம் 'அயலான்'. இப்படம் சில வருடங்கள் தாமதத்துடன் அடுத்த வருட பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
இப்படம் குறித்து சமீபத்தில் ஒரு சர்ச்சை எழுந்தது. பட வெளியீட்டில் சிக்கல் என ஒரு செய்தி வெளியான நிலையில் அதற்கு நேற்றே மறுப்பு தெரிவித்து விளக்கத்தையும் அளித்தது படக்குழு. அடுத்து படத்தின் பொங்கல் வெளியீட்டை மீண்டும் உறுதி செய்துள்ளது.
“படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் அதிக நாடுகளிலும், அதிக தியேட்டர்களிலும் இருக்கும். இதுவரை வெளிவந்த சிவகார்த்திகேயன் படங்களை விட மிக அதிகமாக இருக்கும். 2024 பொங்கல் வெளியீடு,” என புதிய போஸ்டர் ஒன்றைப் பகிர்ந்து தெரிவித்துள்ளார்கள்.
இதனால், பொங்கல் போட்டியிலிருந்து பின் வாங்கப் போவதில்லை என்பதை அழுத்தமாய் சொல்கிறது 'அயலான்' குழு என எடுத்துக் கொள்ளலாம்.