
ஓ நண்பனே... நண்பனே... : 21 ஆண்டுகளுக்கு பின்... நெகிழ்ச்சியில் ரஜினி, கமல்
அருகருகே படப்பிடிப்பு நடப்பதை அறிந்த இருவரும் சந்தித்து பேசினர். கமல், ரஜினி வெளி இடங்களில் நிறைய முறை சந்தித்து இருந்தாலும் படப்பிடிப்பு தளத்தில் 21 ஆண்டுகளுக்கு பின் இப்போது தான் சந்தித்துள்ளனர். இருவரும் எத்தனை நாளாச்சு... என தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதுதொடர்பான வீடியோ வைரலானது. முன்னதாக பாபா, பஞ்சதந்திரம் படங்களின் படப்பிடிப்பு இதே இடத்தில் நடைபெற்ற போது இருவரும் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!