என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
நடிகை த்ரிஷா பற்றி பேட்டி ஒன்றில் ஆபாசமாகப் பேசிய நடிகர் மன்சூரலிகானுக்கு பல சினிமா பிரபலங்கள் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். தெலுங்குத் திரையுலகின் சீனியர் ஹீரோவான சிரஞ்சீவி கூட நேற்று அவரது கண்டனத்தைத் தெரிவித்திருந்தார். தெலுங்கு ஹீரோவான அவரே தெரிவித்த பின்பும் இங்குள்ள தமிழ் ஹீரோக்கள் அது பற்றி எதுவும் சொல்லாமல் மவுனமாக இருக்கிறார்கள்.
'லியோ' படத்தின் கதாநாயகனாக விஜய், மற்ற முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் ஆகியோரும் இதுவரை தங்களது கண்டனங்களைப் பதிவு செய்யவில்லை. இவர்கள் அனைவருடனும் த்ரிஷா இணைந்து நடித்தவர் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
நடிகர் சங்கம் இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை விட்டுவிட்டதால் முன்னணி நடிகர்கள் அனைவரும் இந்த விவகாரத்தில் சிக்குவதைத் தவிர்க்கிறார்களா என்றும் தெரியவில்லை. நேற்று மன்சூரலிகான் அளித்த பேட்டியில் கூட நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், செயலாளர் விஷால் ஆகியோர் எனது தொலைபேசி அழைப்பை எடுக்கவில்லை என்றே தெரிவித்திருந்தார்.
தேசிய மகளிர் ஆணைய உத்தரவுப்படி தமிழக போலீசார் வழக்குப் பதிவு செய்த பின்பும் தமிழின் முன்னணி நடிகர்கள் எதுவும் பேசாமல் இருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.