மருமகனுக்காக படம் தயாரிக்கும் விஜய் ஆண்டனி | ரஜினியே ரத்தத்தை நம்பி தான் படம் எடுக்கிறார் : ராதாரவி பேச்சு | இந்து தர்மத்தை சினிமாவில் சொல்வதை நினைத்து பெருமைப்படுகிறேன் : ‛ஹனுமன்' ஹீரோ | பார்வையாளர்களின் பதிலை மட்டுமே மதிக்கிறேன் : பல்லவி ஜோஷி | 100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? | 'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? | சமூக வலைத்தள கொள்ளையர்கள் : IFTPC காட்டம் | பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? |
கவுதம் மேனன் இயக்கத்தில், விக்ரம், ரித்து வர்மா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'துருவ நட்சத்திரம்' படம் நாளை மறுதினம் நவம்பர் 24ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கான தமிழக முன்பதிவு இதுவரை ஆரம்பமாகவில்லை. ஆனால், வெளிநாடுகளில் உள்ள தியேட்டர்களில் ஆரம்பமாகிவிட்டது.
தமிழக வெளியீட்டு வியாபாரம் இன்னும் முடிவடையாததால் இங்கு முன்பதிவு ஆரம்பமாகவில்லை என்று சொல்லப்படுகிறது. படம் வெளியாக ஓரிரு நாட்களே உள்ள நிலையில் இந்த இழுபறி நீடித்து வருகிறது.
இப்படத்தை வைத்து கவுதம் மேனன் ஒரு பெரும் தொகையை கடனாக வாங்கி அதை அடைக்க வேண்டுமாம். படத்தின் வியாபாரம் முடிவடைந்து அதற்கான தொகை கைக்கு வந்தால் மட்டுமே அவரால் கடனை அடைக்க முடியும் என்கிறார்கள்.
இந்த வாரம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள படங்களில் இந்தப் படம்தான் பெரிய படம். ஏற்கெனவே மழையால் கடந்த சில நாட்களாக பல ஊர்களில் பல தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்யப்படும் நிலை உள்ளது. இந்தப் படம் வரவில்லை என்றால் தியேட்டர்காரர்களுக்கும் பாதிப்புதான், சந்தானத்தின் '80ஸ் பில்டப்' படத்தை மட்டுமே வைத்து ஓட்ட வேண்டும்.