பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ் திரையுலகம் சார்பில் ‛கலைஞர் 100' என்ற பெயரில் பிரமாண்ட நிகழ்ச்சி நடைபெற உள்ளது. வரும் டிச., 24ல் இந்த விழா சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக தமிழ் திரையுலகத்தின் சங்கத்தினர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அவர்கள் பேசும்போது, ‛‛இந்த மாபெரும் விழாவில் முதல்கட்டமாக ரஜினிகாந்த், கமல்ஹாசன், இளையராஜா ஆகியோர் கலந்து கொள்ள இசைவு தெரிவித்துள்ளார்கள். தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நட்சத்திரங்கள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் என பலரும் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளோம்.
சென்னை சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் குறைந்த பட்சம் 35000 பேர் இந்த விழாவினை அமர்ந்து பார்க்கும் வண்ணம் மேடை அமைக்கப்பட உள்ளது. இந்த மாபெரும் விழாவில் சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடுவதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. நடனம், நாடகம், இசைக்கச்சேரி, ஒலி, ஒளி காட்சிகள், ட்ரோன்கள் படையெடுப்பில் கண்கவர் நிகழ்ச்சிகள் மேலும் பல வித்தியாசமான நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவரும் வண்ணம் உருவாக்கி வருகிறோம்.
இந்த விழாவினை திரை நட்சத்திரங்களும், திரைக்கலைஞர்களும் பங்கெடுத்து சிறப்பிக்க இருப்பதால் அடுத்த மாதம் டிசம்பர் 23 மற்றும் 24 ஆகிய இரண்டு நாட்கள் தமிழ்நாடு முழுவதும் படப்பிடிப்புகள் உட்பட திரை உலக வேலைகள் எதுவும் நடைபெறாது.
அகில இந்திய அளவில் தெலுங்கு, கன்னடம், பெங்காலி, மலையாளம், இந்தி, மராத்தி, ஒரியா, குஜராத்தி என பல மொழி திரைப்பட கலைஞர்களை இந்த விழாவில் கலந்து கொள்ள வருமாறு அழைப்பு விடுக்க உள்ளோம். கருணாநிதி வசனம் எழுதிய படங்களில் இருந்து பல்வேறு காட்சிகள் நேரடியாக நடித்து காட்ட திரைப்பட நட்சத்திரங்கள் தயாராகி வருகின்றனர்.
மேலும் இந்த மாபெரும் விழாவினை சிறப்பிக்கும் விதமாக முதலமைச்சர் மற்றும் மத்திய, மாநில அமைச்சர் பெருமக்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இந்த சந்திப்பில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் என்.ராமசாமி, செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், தயாரிப்பாளர் தாணு, பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி, கே.ராஜன், டி.சிவா, நடிகைகள் லதா, லலிதா குமாரி உள்ளிட்ட பலர் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.