ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு | ரத்தத்தால் அடா சர்மாவின் ஓவியம் வரைந்த ரசிகர் |
நடிகை த்ரிஷா குறித்து ஆபாசமாகப் பேசிய நடிகர் மன்சூர் அலிகானுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் சினிமாவில் உள்ள பல சங்கங்கள், சினிமா பிரபலங்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்கள். பிறமொழிகளில் உள்ள கலைஞர்களும் அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த விஷயத்தில் ஏற்கனவே விளக்கம் அளித்த மன்சூர் அலிகான், ‛‛த்ரிஷாவிடம் தப்பா கட் பண்ணி காமிச்சு கோபப்பட வச்சுருக்காங்க. உலகத்துல எத்தனையோ பிரச்னை இருக்கு... பொழப்ப பாருங்கப்பா....,” என கூறியிருந்தார்.
சென்னையில் செய்தியாளர்களை இன்று(நவ., 21) சந்தித்தார் மன்சூர் அலிகான். அவர் கூறுகையில், ‛‛என்னை பெரிய ஹீரோவாக்கிவிட்ட எல்லோருக்கும் நன்றி. த்ரிஷாவை பற்றி நான் தவறாக பேசவில்லை. அவரைப்பற்றி பாராட்டிதான் பேசி உள்ளேன். அதற்காக அவர் தான் எனக்கு நன்றி சொல்ல வேண்டும். சினிமாவில் ரேப் சீனில் நடிக்கிறார்கள் என்றால் உண்மையில் ரேப் பண்ணுகிறார்களா... கொலை செய்யும் காட்சிகளில் நடிக்கிறார்கள் என்றால் உண்மையில் கொலை செய்கிறார்களா...
நடிகர் சங்கம் மிகப்பெரிய தவறு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என என்னிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்க வேண்டும். அல்லது விளக்கம் கேட்டிருக்க வேண்டும். அப்படி செய்யவில்லை. நடிகர் சங்கத்திற்கு 4 மணிநேரம் அவகாசம் தருகிறேன். அதற்குள் அவர்கள் கொடுத்த அறிக்கையை வாபஸ் பெற வேண்டும். சங்க விதிமுறைப்படி எனக்கு நோட்டீஸ் அனுப்புங்க.... நான் விளக்கம் தருகிறேன். என்னைப் பற்றி மக்களுக்குத் தெரியும். அவர்கள் என் பக்கம் உள்ளனர். நான் யாரிடமும் மன்னிப்பு கேட்கக்கூடிய ஆள் இல்லை. எரிமலை குமுறினால் சுற்றியிருப்பவர்கள் தெறித்து ஓடுவார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பாரதிராஜா கண்டனம்
மன்சூர் அலிகானின் பேச்சுக்கு நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரும், இயக்குனருமான பாரதிராஜா வெளியிட்ட அறிக்கையில், ‛‛சக கலைஞர்கள் பற்றி பேசும்போது பொறுப்புணர்ந்து பேச வேண்டும். தடித்த வார்த்தைகளை பேசியதற்கு நமது சங்கம் சார்பில் என் வன்மையான கண்டங்களை தெரிவித்துக் கொள்கிறேன். மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்காதது முறையற்ற செயல். அவர் மன்னிப்பு கேட்டு இந்த பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைப்பதே சிறந்த செயல் என நாங்கள் அனைவரும் கருதுகிறோம். கலைஞர்கள் பேசும்போது காமெடி என்ற பெயரில் அடுத்தவர்களை புண்படுத்தும் வார்த்தைகளை தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்,'' என தெரிவித்துள்ளார்.
விரைவில் முடிவு
இதற்கிடையே மன்சூர் அலிகான் விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர நடிகர் சங்கம் விரைவில் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி செயற்குழு கூட்டத்தில் கலந்தாலோசித்து, இரு தரப்பினரையும் விசாரித்த பிறகு முடிவு தெரிவிக்கப்படும் என கூறப்படுகிறது.