ரஜினியின் ஜெயிலர் 2 வில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | மகாராஜா படத்தால் அனுராக்கிற்கு ஆஸ்கர் இயக்குனரிடம் வந்த அழைப்பு | ஏழு மலை ஏழு கடல் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரீ ரிலீஸ் ஆகும் ரஜினி முருகன் | ஓடிடியில் வெளியாகும் நயன்தாராவின் டெஸ்ட் | கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி உடன் இணைந்து பொங்கல் கொண்டாடிய விஜய் | கேம் சேஞ்சர் படத்தின் ரிசல்ட் ஏமாற்றம் அளிக்கிறது : இயக்குனர் ஷங்கர் | அனுஷ்காவின் காதி படத்தில் முக்கிய வேடத்தில் விக்ரம் பிரபு | பெரிய படங்ளை வாங்கிய ஓடிடி நிறுவனம் | நட்புக்காக கெஸ்ட் ரோலில் நடித்ததுடன் சக்சஸ் மீட்டிலும் கலந்து கொண்ட மம்மூட்டி |
இந்தியாவில் நடக்கும் திரைப்பட விழாக்களில் பெரியது கோவாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழா. இதில் உலகெங்கும் உள்ள திரைப்பட கலைஞர்கள் கலந்து கொள்வார்கள். அந்த வகையில் 54வது சர்வதேச திரைப்பட விழா நேற்று தொடங்கியது. இந்த விழா வருகிற 28ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 270க்கும் அதிகமான படங்கள் திரையிடப்பட உள்ளன. சர்வதேச பிரிவில் மட்டும் சுமார் 198 திரைப்படங்கள் திரையிடப்படுகிறது.
இந்தியன் பனோரமா பிரிவில் விடுதலை, காதல் என்பது பொதுவுடைமை, நீல நிற சூரியன் ஆகிய படங்களும், மெயின்ஸ்டிரீம் பிரிவில் பொன்னியின் செல்வன் என 4 தமிழ் படங்கள் திரையிடப்படுகின்றன. சத்யஜித்ரே பெயரில் வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளர் விருது இந்த ஆண்டு ஹாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான மைக்கேல் டக்ளஸிற்கு வழங்கப்படுகிறது.
நேற்று நடந்த தொடக்க விழாவில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அதோடு பிலிம் பஜாரையும் அமைச்சர் திறந்து வைத்தார். விழாவில் பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித்திற்கு சினிமாவின் சிறந்த பங்களிப்பாளருக்கான விருது வழங்கப்பட்டது.
விழாவில் ஷாகித் கபூர், கேத்தரின் ஜீட்டா ஜோன்ஸ், வித்யா பாலன், ஆயுஷ்மான் குரானா, அனுபம் கெர், விக்கி கவுசல், சித்தார்த் மல்ஹோத்ரா, அதிதி ராவ் ஹைதாரி, அமித் ஆகியோரும் கலந்து கொண்டனர். ஸ்ரேயா சரண், நஷ்ரத் பரூச்சா, சாந்தனு மொய்த்ரா ஆகியோரின் நடன நிகழ்ச்சி நடந்தது.
விருது பெற்ற பிரிட்டிஷ் இயக்குனர் ஸ்டூவர்ட் காட் இயக்கிய 'கேட்ச்சிங் டஸ்ட்' படத்தின் சர்வதேச பிரீமியர் காட்சியுடன் விழா தொடங்கியது.