நயன்தாராவை உட்படுத்தி சர்ச்சை கருத்து: நடிகர் சங்கம் கண்டனம் | மோகன்லாலின் 'திரிஷ்யம்-3' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்! | திரிஷா மிகவும் கண்ணியமானவர்! -சொல்கிறார் குஷ்பு | 100 கோடியை எட்டிப்பிடிக்குமா ராதிகா சரத்குமாரின் 'தாய் கிழவி'? | ரஜினிகாந்த் Vs விஜய் : வெளிப்படை மோதல் ஆரம்பம் | நயன்தாரா பற்றி சர்ச்சை பேச்சு : வருத்தம் தெரிவித்த சிவி சண்முகம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாலசந்தரை நிரந்தர சினிமா இயக்குநராக மாற்றிய “நீர்க்குமிழி” | 'சேயோன்' படத்தில் 'விருமாண்டி'-ஆக தொடரும் கமல்ஹாசன் | 'உஸ்தாத் பகத் சிங்' விழாப் பேச்சு : மன்னிப்பு தெரிவித்த பார்த்திபன் | கோடையில் வெளி வர காத்திருக்கும் படங்கள் |

சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'கங்குவா'. திஷா பதானி, பாபி தியோல், ஜெகபதி பாபு, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யு.வி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்
இதன் படப்பிடிப்பு இதுவரை பல கட்டமாக தாய்லாந்து, சென்னை, கோவா, ராஜமுந்திரி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்தது. தற்போது இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இப்படத்தை 2024 ஏப்ரல் 11ம் தேதி திரைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ள நிலையில் இப்போது ஐமேக்ஸ் திரையரங்குகளில் கூடுதலாக வெளியிட திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழில் பொன்னியின் செல்வன், லியோ உள்ளிட்ட படங்கள் ஐமேக்ஸில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.