அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு | நடிகை ரம்யா மீது அவதூறு தாக்குதல் : இதுவரை நடிகர் தர்ஷினின் 12 ரசிகர்கள் கைது | மலையாள திரையுலகை பிடித்து ஆட்டும் கேமியோ ஜுரம் | முதலில் ‛பியார் பிரேமா காதல்' இப்போது ‛பியார் பிரேமா கல்யாணம்' | ஜெயிலர் 2 படத்தில் சர்ப்ரைஸ் ஆக என்ட்ரி தரும் வித்யாபாலன் | மீசைய முறுக்கு 2ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | வராது... ஆனா வரும்! பாஸ்கியுடன் ஒரு 'கலகல' | இரண்டே முக்கால் மணி நேரம் ஓடும் 'மதராஸி' |
லியோ படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் தனது 68வது படத்தில் நடித்து வருகிறார் விஜய். இப்படத்தில் அவருடன் மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்ற நிலையில் தற்போது தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. அங்கு ஒரு கார் சேஸிங் சண்டைக்காட்சியில் நடித்து முடித்துவிட்டு நேற்றுதான் சென்னை திரும்பினார் விஜய்.
மேலும் இந்த படத்தில் விஜய், அப்பா- மகன் என இரண்டு வேடங்களில் நடிப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இந்த படத்தில் இரண்டு வேடங்களில் ஒரு வேடத்தில் விஜய் நெகட்டீவ் ரோலில் நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே பிரியமுடன், அழகிய தமிழ் மகன் போன்ற படங்களில் பாசிட்டிவ் - நெகட்டிவ் வேடங்களில் நடித்த விஜய், தற்போது 68வது படத்திலும் அதே பாணியில் நடிக்கிறார்.