'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் | பிடிகொடுக்காத நடிகரால் அதிருப்தியில் பிரமாண்ட இயக்குனர் |
லியோ படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் தனது 68வது படத்தில் நடித்து வருகிறார் விஜய். வரப்போகிற 2026 சட்டசபை தேர்தலுக்கு முன்பு அவர் அரசியல் களத்தில் இறங்க திட்டமிட்டுள்ளார். அதற்கேற்ப விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ரத்ததான மையம், விஜய் விழியகம், விஜய் இரவு பாடசாலை, விஜய் மினி கிளினிக் உட்பட பல மக்களுக்கான சேவை மையங்களை துவக்கி வரும் விஜய், அடுத்து தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும் நூலகம் தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ளார். இந்த நூலகங்களில் அரசியல் தலைவர்கள், தேசிய தலைவர்கள், தமிழர்கள் வரலாறு குறித்த புத்தகங்கள் இடம் பெறுகிறதாம். தற்போது அதற்கு தேவையான புத்தகங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு வருகிறது.
தற்போது தான் நடித்து வரும் 68 வது படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும், சில மாதங்கள் நடிப்புக்கு இடைவெளி கொடுத்துவிட்டு அரசியல் கட்சி தொடங்கும் பணிகளில் விஜய் ஈடுபடுவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.