சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா |

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வந்துள்ள படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில், இயக்குனர் ஷங்கர் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் குறித்து தனது சோசியல் மீடியாவில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில், ஜிகர்தண்டா 2 படம் சிறப்பாக உள்ளது. கார்த்திக் சுப்பராஜின் சிறப்பான புத்திசாலித்தனமான படைப்பு. இப்படத்தின் இரண்டாம் பாதி எதிர்பார்க்காத வகையில் அமைந்திருக்கிறது. இப்படம் சினிமாவுக்கான மரியாதையை உயர்த்தி உள்ளது. லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா இருவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணனின் இசை மிரட்டலாக உள்ளது என்று படத்தை பாராட்டி இருக்கிறார் ஷங்கர்.