அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
தற்போது ஞானவேல் இயக்கி வரும் தனது 170வது படத்தின் நடித்து வரும் ரஜினிகாந்த் அதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் 171வது படத்தில் நடிக்கப் போகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரலில் தொடங்க உள்ளது. மேலும், ஜெயிலர் படத்தில் நடிப்பதற்கு முன்பு சில இளவட்ட இயக்குனர்களிடத்தில் கதை கேட்டார் ரஜினி. அவர்களில் கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் என்ற படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி மற்றும் டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
அதையடுத்து இவர்கள் இருவரின் இயக்கத்திலும் ரஜினி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் ரஜினியோ, நெல்சன் இயக்கிய ஜெயிலர் படத்தில் நடிக்க தொடங்கி விட்டார். இந்த நிலையில் ரஜினியிடத்தில் தான் கூறிய அதே சரித்திர கதையை சிம்புவிடத்தில் கூறி ஓகே செய்துவிட்டார் தேசிங்கு பெரியசாமி. அந்த படம் தான் தற்போது கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிம்புவின் 48வது படமாக உருவாகப் போகிறது. அதோடு இந்த படத்தை மிகப் பிரமாண்டமாக 100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளார்கள்.