சூர்யா 45வது படத்தில் விஜய் சேதுபதி? | காளிதாஸ் ஜெயராமிற்கு முதல்வர் நேரில் வாழ்த்து | பரத் படத்தில் 20 நிமிட காட்சியை நீக்கியும் 'ஏ' சான்றிதழ்: தயாரிப்பாளர் புகார் | பிளாஷ்பேக்: இசை அமைப்பாளர் ரகுவரன் | ராகவா லாரன்ஸிற்கு வில்லனாகும் மாதவன் | கதாநாயகி ஆவேன் என கனவிலும் நினைக்கவில்லை - மீனாட்சி சவுத்ரி | பிளாஷ்பேக்: 7 சூப்பர் ஹிட் படங்கள், கைவிட்ட கணவன், 32 வயதில் மரணம்: வசந்த கோகிலத்தின் சோக வாழ்க்கை | ராமதாஸ் பேத்தி படத்தின் டீசரை வெளியிட்ட ரஜினி | 2024ல் டபுள் ரூ.1000 கோடி - அசத்திய தெலுங்கு சினிமா | அமெரிக்காவில் 10 மில்லியன் வசூலைக் கடந்த 'புஷ்பா 2' |
தமிழில் நாளை நமதே, நீயா போன்ற படங்களில் நடித்தவரும், தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகருமான சந்திர மோகன்(80) மாரடைப்பு காரணமாக ஐதராபாத்தில் காலமானார்.
தெலுங்கு சினிமாவில் ஏராளமான படங்களில் நாயகனாக நடித்தவர் சந்திரமோகன். ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் 1943, மே 23ல் பிறந்தார் சந்திரமோகன். ரங்குலா ரத்னம் படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமான இவர் ஏராளமான படங்களில் நாயகனாக நடித்தார். தமிழில் எம்ஜிஆர் நடித்த நாளை நமதே படத்தில் அவரது சகோதரராக நடித்தார். தொடர்ந்து கமலின் நீயா படத்தில் இச்சாதாரியாக நடித்த ஸ்ரீபிரியாவின் காதலனாக நடித்தார். பின்னர் ஒருகட்டத்திற்கு மேல் குணச்சித்ர வேடத்தில் நடித்து வந்தார்.
உடல்நலம் பாதிக்கப்பட்ட சந்திரமோகன் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மாரடைப்பு காரணமாக இன்று(நவ., 11) காலை 9:45 மணியளவில் காலமானார். அவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். அவரது இறுதிச்சடங்கு திங்கள்கிழமை அன்று ஐதராபாத்தில் நடைபெறுகிறது.