காஞ்சனா 4ம் பாகத்தில் இணைந்த இளம் சீரியல் நடிகை | பாவ்னி - அமீருக்கு ஏப்., 20ல் டும் டும் | கேஜிஎப் 2வை 15 நிமிடத்துக்கு மேல் தொடர்ந்து பார்க்க முடியவில்லை : ராம்கோபால் வர்மா | எம்புரான் படத்தில் நடித்த பாலிவுட் நடிகைக்கு தினசரி மூன்று மணி நேரம் மேக்கப் | 2 வருடம் கழித்து ஓடிடியில் வெளியான மைக்கேல் படத்திற்கு வந்த சோதனை | மகேஷ்பாபுவின் மச்சினிச்சியை கிண்டலடித்த பரா கான் | இங்கிலாந்து திரைப்பட கல்லூரியில் பாடமாக எடுக்கப்பட்ட மம்முட்டியின் பிரம்மயுகம் | த்ரிஷா வீட்டிற்குப் புதிய வரவு இஸ்ஸி | தமிழில் கலக்க வரும் மராத்திய நடிகை | இளையராஜாவின் 'பேரன்பும் பெருங்கோபமும்' |
மலையாள திரையுலகின் முன்னணி இயக்குனர் ஜீத்து ஜோசப். மலையாள மட்டும் இன்றி தென்னிந்திய அளவில் ஏன் பாலிவுட்டிலும் கூட தனது திரிஷ்யம் படங்களின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர். அதே சமயம் படத்தை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வேகமாக முடிக்கும் அளவிற்கு விறுவிறுப்பாக செயல்படும் ஜீத்து ஜோசப் பெரிய நடிகர், சிறிய நடிகர் என பாரபட்சம் பார்க்காமல் படங்களை இயக்கி வருகிறார்.
அந்த வகையில் கடந்த சில மாதங்களாக மோகன்லால் நடிப்பில் நேரு என்கிற படத்தை இயக்கி வந்தார் ஜீத்து ஜோசப். அந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் முடிவடைந்தது. வரும் டிச-21ம் தேதி படம் வெளியாக இருக்கிறது.
இந்தநிலையில் தற்போது தனது அடுத்த படமான 'நுனகுழி' என்கிற படத்தை இயக்க துவங்கி விட்டார் ஜீத்து ஜோசப். இந்த படத்தில் மின்னல் முரளி பட இயக்குனரும் ஜெய ஜெய ஜெய ஜெய ஹே படத்தில் கதாநாயகனாக நடித்தவருமான பஷில் ஜோசப் தான் கதாநாயகனாக நடிக்கிறார். ஜீத்து ஜோசப் உடன் இணைந்து ஏற்கனவே டுவல்த் மேன், கூமன் ஆகிய படங்களுக்கு கதை எழுதிய கே.ஆர் கிருஷ்ணகுமார் இந்த படத்திலும் இணைந்து கதை எழுதி உள்ளார்.