எமர்ஜென்சி படத்திற்கு பஞ்சாபில் தடை : கங்கனா கோபம் | 'விடாமுயற்சி' ரீமேக் உரிமை சிக்கலுக்குத் தீர்வு | ஷங்கருக்கு ஆதரவாகப் பேசினாரா தமன்? | ரசிகர்கள் கல் எறிய மாட்டார்கள் என நம்புகிறேன் : விஷால் | விரைவில் திரைக்கு வரும் தினேஷின் கருப்பு பல்சர் | விஜயகாந்த் படத்தின் தலைப்பில் நடிக்கிறாரா தனுஷ்? | சமரச பேச்சுவார்த்தை - ரவி மோகன், ஆர்த்தியின் விவாகரத்து வழக்கு தள்ளிவைப்பு | ரஜினியின் ஜெயிலர் 2 அறிமுக டீசரின் மேக்கிங் வீடியோ வெளியானது | இயக்குனர், தயாரிப்பாளர் ஜெயமுருகன் காலமானார் | விவசாயத்தின் முக்கியத்துவம் பேசும் 'மருதம்' |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்து அக்டோபர் 19ம் தேதி வெளிவந்த படம் 'லியோ'. இப்படம் வெளியான பின் விஜயதசமி விடுமுறை தினம் வந்ததால் ஆறு நாட்களுக்கு தினமும் ஐந்து காட்சிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. அந்த ஆறு நாட்களில் படத்தைப் பார்க்க நினைத்த பலரும் பார்த்துவிட்டார்கள்.
அதன் பின் வந்த வார நாட்களில் குறைவான ரசிகர்களே படத்திற்கு வந்தனர். ஆனால், அடுத்து வந்த சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் ஓரளவுக்கு கூட்டம் வந்ததால் கொஞ்சம் சமாளித்தார்கள். இந்நிலையில் இரண்டு வாரங்கள் முடிந்த பின் மூன்றாவது வாரத்திலும் படம் தொடர்கிறது. பல தியேட்டர்களில் படம் ஓடினாலும் வெறும் 10, 15 பேர்கள் மட்டுமே வந்து படம் பார்ப்பதாகச் சொல்கிறார்கள்.
சில தியேட்டர்களில் அவர்களை வைத்தே படத்தை ஓட்டிவிடுகிறார்களாம். ஆனால், சில தியேட்டர்களில் காட்சிகளை ரத்து செய்வதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. கடந்த வாரம் வெளியான சிறிய பட்ஜெட் படங்கள் சில காட்சிகள் கூடத் தாங்கவில்லை. வேறு படங்கள் இல்லாத காரணத்தால் இன்னும் மூன்று நாட்களுக்கு 'லியோ' படத்தை வைத்தே கடத்துவதைத் தவிர வேறு வழியில்லை.