இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
விஜய் நடித்த யூத் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் இயக்குனர் மிஷ்கின். அதன்பிறகும் சில படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி விட்டு, சித்திரம் பேசுதடி படத்தில் இயக்குனர் ஆனார். அதோடு விஜய்யை வைத்து அவர் இதுவரை படம் இயக்கவில்லை. என்றாலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான லியோ படத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் லியோ படத்தின் வெற்றி விழா நடைபெற்ற போது அதில் கலந்து கொண்ட இயக்குனர் மிஷ்கின், தலை வணங்கி விஜய்யின் கைக்கு முத்தம் கொடுத்தார். அதோடு, விஜய்யை ஒரு லெஜன்ட் என்றும் அவர் கூறியிருந்தார். புரூஸ்லீ, மைக்கேல் ஜாக்சன் போன்ற லெஜெண்டுகள் பற்றி படித்திருக்கிறேன். நான் நேரில் பார்த்த லெஜெண்ட் விஜய் மட்டும் தான் என்றும் அவர் பேசியிருந்தார்.
இப்படியான நிலையில் விஜய்யின் கைகளை பிடித்தபடி தலை வணங்கி அவர் முத்தம் கொடுத்தது சோசியல் மீடியாவில் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. இந்த நிலையில் அது குறித்து மீடியாக்கள் கேட்ட கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், ‛‛என்னை அனைவரும் பணிவில்லாதவன் என்று தான் கூறுகிறார்கள். அதன் காரணமாகவே விஜய்க்கு பணிந்து முத்தம் கொடுத்தேன். அதற்கு இவ்வளவு விமர்சனமா? இதை நான் என் மனசிலிருந்து செய்தேன். எப்போதுமே மற்றவர்களுடன் பழகும் போது மனதில் இருந்து தான் பழகுவேன். படங்கள் இயக்கும்போது மட்டும் தான் எனது அறிவை செயல்படுத்துவேன்'' என்று கூறியுள்ள மிஷ்கின், ‛‛விஜய் ஒரு மகா கலைஞன். நல்ல மனிதன். லியோ படத்தில் நடித்தபோது என்னை ஒரு குழந்தை போன்று அவர் பார்த்துக் கொண்டார்'' என்றும் கூறியிருக்கிறார்.