'சாயரா' இந்தியாவில் நிகர வசூல் 250 கோடி | 'அவதார் - பயர் அண்ட் ஆஷ்' டிரைலர் ரிலீஸ் | ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? |
குலேபகவாலி, ஜாக்பாட் போன்ற படங்களை இயக்கிய கல்யாண் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் '80ஸ் பில்டப்'. ராதிகா பிரீத்தி, கே.எஸ்.ரவிகுமார், ஆனந்த் ராஜ், மன்சூர் அலிகான், முனீஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, தங்கதுரை உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு வெறும் 20 நாட்களில் முடிவடைந்தாக கூறப்படுகிறது. முழுக்க முழுக்க காமெடி கதையில் இந்த படம் உருவாகி உள்ளது. மற்ற பணிகள் நடந்து வரும் சூழலில் வருகின்ற நவம்பர் 24ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதனிடையே படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர். இதில் கமல் ரசிகராக சந்தானம் நடித்துள்ளார். 80ஸ் காலத்தில் படத்தின் திரைக்கதை பயணிக்கும் என டீசரை பார்க்கும்போதே தெரிகிறது.