நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? | அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ் | கார்த்திகை தீபம் சீரியலிலிருந்து விலகிய அயுப் | பிளாஷ்பேக் : 3 இயக்குனர்கள் இயக்கிய புராண படம் | பிளாஷ்பேக் : ஹீரோயின் ஆக நடித்த டி.ஏ.மதுரம் | கோவா திரைப்பட விழாவில் தமிழ் குறும்படம் | 110 நிமிடம் பிணமாக நடித்து பிரபுதேவா சாதனை | முதல்வர் குடும்ப திருமணத்தில் தனுஷ், நயன்தாரா : முகத்தை திருப்பிக் கொண்டு வெறுப்பை காட்டினர் |
தமிழ் சினிமாவில் குணச்சித்ர நடிகையாக இருப்பவர் ரஞ்சனா நாச்சியார். ‛துப்பறிவாளன், இரும்புத்திரை, டைரி, நட்பே துணை' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழக பா.ஜ.விலும் இவர் இருக்கிறார்.
சென்னை, கெரும்பாக்கம் பகுதியில் நேற்று சென்ற அரசு பேருந்தில் மாணவர்கள் சிலர் அபாயகரமான முறையில் படியில் தொங்கியும், ஜன்னல் மீது ஏறியும் பயணம் செய்தனர். இதை அந்த வழியாக தனது வாகனத்தில் வந்த ரஞ்சனா பார்த்து, பேருந்தை நிறுத்தினார். பேருந்து ஓட்டுனர், நடத்துனரிடம் இதுபற்றி கேட்க மாட்டீங்களா என ஒருமையில் பேசினார். தொடர்ந்து அதில் பயணித்த மாணவர்களை கிறக்கிவிட்டு அவர்களை தாக்கியும் உள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.
இதுபற்றி பேருந்து ஓட்டுனர் சரவணன் போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்று(நவ., 4) காலை ரஞ்சனாவை அவரது வீட்டிற்கே சென்று போலீசார் கைது செய்தனர். மாணவர்களை தாக்கியது, ஓட்டுனர், நடத்துனரை தரக்குறைவாக பேசியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக ரஞ்சனாவை போலீசார் கைது செய்ய வந்தபோது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.
படிக்கட்டில் பயணம் செய்வதே தவறு. அதிலும் இதில் பயணித்த மாணவர்கள் பேருந்தின் ஜன்னல் மீதெல்லாம் ஏறி அட்டகாசம் செய்துள்ளனர். நேற்று ஏதேனும் விபரீதம் நடந்து இருந்தால் என்னவாகி இருக்கும். அந்த சூழலில் மாணவர்களை நல்வழிப்படுத்தியதற்காக ரஞ்சனாவை கைது செய்ததற்கு சமூகவலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அவர் பா.ஜ.வை சேர்ந்தவர் என்பதால் அரசு பழிவாங்கும் வகையில் செயல்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர். அதேசமயம் அவர் முன்னெடுத்தது நல்ல விஷயம் தான் என்றாலும் மாணவர்கள் மீது கை நீட்டியது தவறு என்று சுட்டிக் காட்டுகிறார்கள்.
ஜாமினில் விடுதலை
கைதான நடிகை ரஞ்சனா நாச்சியாருக்கு ஸ்ரீபெரும்புதுார் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உள்ளது. 40 நாட்கள் இருவேளை மாங்காடு போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகி கையொப்பமிட வேண்டும் என தெரிவித்துள்ளது.