ரோஜாஸ்ரீயின் அழகு ரகசியம் | ‛‛கமல் ஒரு ஏணி; அவரை மதித்து மேலே செல்வேன், மிதித்து அல்ல'': சிம்பு | 'கேம் சேஞ்ஜர்' அனுபவம் ஒரு 'பயங்கரம்' - விலகிய எடிட்டர் பேச்சு | பிளாஷ்பேக்: மலைக்க வைக்கும் 50வது ஆண்டில் “மயங்குகிறாள் ஒரு மாது” | ஜூன் மாதத்தில் ‛சர்தார் 2' படப்பிடிப்பு முடியும் ; மாளவிகா மோகனன் | காதலிக்க நேரமில்லை, தில், ராட்சசன் - ஞாயிறு திரைப்படங்கள் | நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி |
நடிகர் கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசன். அவரும் அக்கா ஸ்ருதிஹாசனைப் போல மும்பையில் செட்டிலாகிவிட்டார். கமல்ஹாசனின் இரு மகள்களான ஸ்ருதி, அக்ஷரா இருவரும் சென்னையில் பிறந்து வளர்ந்தாலும், கடந்த சில வருடங்களாக தங்கள் வசிப்பிடத்தை மும்பைக்கு மாற்றிவிட்டனர்.
ஸ்ருதிஹாசன் அங்கு ஒரு அபார்ட்மென்ட்டில் அவரது காதலருடன் வசித்து வருவதாக ஒரு தகவல். 37 வயதைக் கடந்தாலும் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். அவரது தங்கை அக்ஷராவும் 30 வயதைக் கடந்தவர். அக்ஷ்ரா அப்பாவின் படங்களில் உதவி இயக்குனராகவும் வேலை பார்த்தவர். தமிழில் 'விவேகம், கடாரம் கொண்டான்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். விஜய் ஆண்டனியுடன் அவர் நடித்து முடித்துள்ள 'அக்னி சிறகுகள்' படம் இன்னும் வெளிவராமல் இருக்கிறது.
அக்ஷரா தற்போது மும்பை புறநகர் பகுதியான கர் என்ற இடத்தில் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள அபார்ட்மென்ட் ஒன்றை வாங்கியுள்ளாராம். 3 கார் பார்க்கிங் கொண்ட அந்த வீட்டிற்கு பதிவுத் தொகையாக மட்டும் ஒரு கோடி ரூபாய் செலுத்தியுள்ளார் எனத் தகவல்.
ஸ்ருதியும், அக்ஷராவும் அவ்வப்போது அவரது அப்பா கமல்ஹாசனை சென்னைக்கு வந்து சந்தித்துவிட்டு மீண்டும் மும்பை சென்றுவிடுவது வழக்கம்.