அவதூறு பரப்பாதீங்க; ரஹ்மான் அற்புதமானவர் - சாய்ரா பானு ஆடியோ வெளியீடு | சூர்யா 44வது படத்தின் புரமோஷனை தொடங்கிய கார்த்திக் சுப்பராஜ் | விவசாயிகளுக்கு விருந்து கொடுத்த நடிகர் விஜய்! | சொர்க்கவாசல் வெளியான பிறகு கைதி-2 கதையை மாற்றுவேன்! -லோகேஷ் கனகராஜ் | தைரியம் காட்டும் அரசியல்வாதி விஜய்: மடோனா சிறப்பு பேட்டி | வெல்லும் வரை காத்திரு: நடிகை குயின்சி ஸ்டான்லி | சிவராஜ் குமாரின் ‛பைரதி ரணங்கள்' நவ. 29ல் தமிழில் ரிலீஸ் | ‛குட் பேட் அக்லி' படத்தை விட்டு வெளியேறிய தேவி ஸ்ரீ பிரசாத்! | தனுஷ் படத்தில் இணைந்த பவி டீச்சர்! | நான் உயிரோடு உள்ளவரை புதுப்பேட்டை 2 முயற்சி தொடரும் - செல்வராகவன்! |
சென்னை: ‛‛மக்களாகிய நீங்கள் தான் மன்னர். நான் உங்களுக்கு உதவியாக இருக்கும் தளபதி. நீங்கள் ஆணையிடுங்கள் நான் செய்து முடிக்கிறேன்'' என லியோ பட வெற்றி விழாவில் நடிகர் விஜய் பேசினார்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் லியோ பட வெற்றி விழா கொண்டாடப்பட்டது. விழாவில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை. விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கே மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் ஏராளமான ரசிகர்கள் விளையாட்டு அரங்கிற்கு முன் குவிந்தனர். ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பால் அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
விழாவில் நடிகர் விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்குனர் மிஷ்கின், நடிகைகள் திரிஷா, மடோனா செபாஸ்டின், வசனகர்த்தா ரத்னகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாலை 6 மணி அளவில் விழா துவங்கியது. தொடர்ந்து 7 மணி அளவில் விழாவிற்கு வந்த விஜய் படத்தில் தன்னுடன் நடித்தவர்கள் மற்றும் இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், மிஷ்கின் ஆகியோரை ஆரத்தழுவினார்.
தொடர்ந்து பேசிய விஜய், ‛‛நாம யார் மனதையும் புண்படுத்த வேண்டாம். நமக்கு நிறைய வேலை இருக்கிறது. பெரிதாக இலக்கு வைத்து அடைய வேண்டும். நம்மால் எது முடியாதோ அதில் ஜெயிக்கிறது தான் வெற்றி . அகிம்சைதான் உண்மையான ஆயுதம், வெற்றி.
ஒவ்வொருவருக்கும் ஆசைகள் கனவுகள் இருக்கும். பாடங்களில் பாடலில் வரும் மது, புகையை மனதில் ஏற்றாமல் சினிமாவை சினிமாவாக பாருங்கள். உலகம் முழுவதும் சினிமாவை அப்படித்தான் பார்க்கிறார்கள். உங்கள் உழைப்பில் எனக்காக செலவு செய்யும் ஒவ்வொரு காசுக்கும் உண்மையாக இருப்பேன். என் மீது அன்பு வைத்துள்ளவர்களே படம் பிடிக்கவில்லை எனில் வெளிப்படையாக கூறி விடுகின்றனர்.
டயலாக்காக பேசுகிறேன் என்று நினைக்காமல் உண்மையாக பேசுகிறேன். நான் குடியிருக்கும் கோவில் நீங்கள் தான். மக்களாகிய நீங்கள் தான் மன்னர். நான் உங்களுக்கு உதவியாக இருக்கும் தளபதி. நீங்கள் ஆணையிடுங்கள் நான் செய்து முடிக்கிறேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இவ்வளவு அன்பு வைத்துள்ள உங்களுக்கு என்ன நான் செய்யப் போகிறேன். மக்களுக்கு பிடித்தால் தட்டி கொடுப்பர். பிடிக்கவில்லை எனில் தட்டி விடுவர்,'' என்றார்.
விஜய் கூறிய குட்டி கதை
ஒரு காட்டில் இருவர் வேட்டையாட செல்கின்றனர். ஒருவர் வில் அம்பு வைத்துள்ளார். மற்றொருவர் ஈட்டி வைத்துள்ளார். வில் அம்பு வைத்துள்ளவர் முயலை வேட்டியாடி எடுத்து சென்றார். ஈட்டி வைத்துள்ளவர் யானையை வேட்டையாட நினைத்து எதுவும் கிடைக்காமல் வீட்டிற்கு செல்கிறார். இதில் வெற்றி பெற்றவர் யானையை வேட்டையாட நினைத்தவர்தான். எனவே பெரியதாக இலக்கு வைத்து நாம் அதை நோக்கி செல்ல வேண்டும் என்றார். யானை, மயில், காக்கா, கழுகு.. என்று விஜய் கூறியபோது பலத்த கைதட்டல் எழும்பியது.
தளபதின்னா என்ன
மக்கள் திலகம்-னா ஒருத்தர் தான். புரட்சிகலைஞர்-னா ஒருத்தர் தான். உலகநாயகன்-னா ஒருத்தர் தான். சூப்பர் ஸ்டார்னா ஒருத்தர் தான். தல-னா அது ஒருத்தர் தான். அப்படி தளபதி-னா என்னனு உங்களுக்கு கீழே வேலை செய்யும் தளபதி நான் என்று விளக்கம் அளித்தார்.
ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடிக்க வேண்டும்
முன்னதாக பேசிய இயக்குனர் மிஷ்கின், ‛‛நான் புரூஸ் லீ, மைக்கேல் ஜாக்சன் என 2 லெஜண்ட் பற்றி படித்திருக்கிறேன். ஆனால் நான் கண்ணால் பார்த்த லெஜண்ட் விஜய். மேலும் அவர் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்றார். தொடர்ந்து தனது டிரேட்மார்க் அன்பை விஜய்யிடம் வெளிப்படுத்தினார்.
எச்சரித்த ஆப்பிள் வாட்ச்
விழாவில் கலந்து கொள்ள விஜய் வந்த போது அதிக சத்தம் எழுப்பப்பட்டது. ஆப்பிள் வாட்ச் அதிக சத்தம் குறித்து எச்சரிக்கை விடுத்தது. இது குறித்து இயக்குனர் ரத்னகுமார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். தொடர்ந்து இயக்குனர் ரத்ன குமார் பேசுகையில் எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் பசித்தால் கீழ வந்துதானே ஆகணும்" என்றார்.
தொடர்ந்து பேசிய நடிகர் அர்ஜூன், ‛‛மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலே போதும். அவரிடம் அது உள்ளது. விஜய் அரசியலுக்கு சீக்கிரம் வந்து விடுவார்'' என்றார்.
தொடர்ந்து அர்ஜூன், விஜய்யாக இருப்பது இஷ்டமா? கஷ்டமா? என கேள்வி கேட்டார். அதற்கு பதில் அளித்த விஜய், ‛‛வெளியே இருந்து பார்க்க கஷ்டமாக இருக்கும். ஆனா ஈஸி தான். அதுக்கு காரணம் ரசிகர்கள்,'' என்றார்.
கவுதம் மேனன் பேசுகையில், ‛‛மிஷ்கின் விஜய்யை ஜேம்ஸ்பாண்ட் என்று சொன்னார். அதை திரையில் காட்ட யோஹன் அத்தியாயம் 1 தான் ஒரே வழி'' என்றார்.
நடிகை திரிஷா பேசுகையில், ‛‛இன்னும் விஜய் எனக்கு காரப்பொரி வாங்கி தரவே இல்லை. அதனால விஜய்யோட இன்னொரு படம் பண்ணலாமா'' என்றார்.
லியோ பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறுகையில், ‛‛விஜய், கமல் , சூர்யா, கார்த்தி போன்ற முன்னணி நடிகர்கள் ‛டிரக் ப்ரீ சொசைட்டி' குறித்து படத்தில் பேசும் போது அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறேன். இது வணிக திரைப்படம் தான். அதில் 10 சதவீதம் நல்லதை சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்'' என்றார்.