கோவை தமிழ் பிடிக்கும்னு கிர்த்தி ஷெட்டி சொன்னது ஏன்? | ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! |

பொன்னியின் செல்வன் படங்களின் வெற்றிக்கு பிறகு விக்ரம் நடிப்பில் வெளியாக உள்ள படம் ‛தங்கலான்'. பா.ரஞ்சித் இயக்கி உள்ள இதில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் டீசரை இன்று(நவ., 1) காலை 11:30 மணியளவில் வெளியிட்டனர்.
1:32 நிமிடங்கள் ஓடும் இந்த டீசரில் வசனங்களே இல்லை. முழுக்க முழுக்க சரித்திர பின்னணியில் இருப்பது போன்று உள்ளது. விக்ரம், மாளவிகா உள்ளிட்ட ஒவ்வொருவரின் தோற்றமும் வித்தியாசமாக உள்ளது. சண்டைக்காட்சிகள், கைகளாலேயே பாம்பை இரண்டாக விக்ரம் பியித்து எறியும் காட்சி, விக்ரமின் உடலில் சாரல் போன்று பீறிட்டு அடிக்கும் ரத்தம் போன்ற காட்சிகள் டீசரில் இடம் பெற்றுள்ளன. டீசரின் இறுதியில் தரை முழுக்க படர்ந்து இருக்கும் தங்கம் படம் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதோடு டீசரின் முடிவில் ‛தங்க மகனின் எழுச்சி' என குறிப்பிட்டுள்ளனர்.
கோலார் தங்க வயல் பின்னணியில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்வியல் பின்னணியில் இந்த படம் உருவாகி உள்ளதாக கூறப்பட்டது. தற்போது டீசரும் தங்கத்தை பின்னணியாக வைத்து நடக்கும் கதைக்களத்தை பிரதிபலிப்பதால் அந்த கதையாக இருக்கலாம் என தெரிகிறது. வரும் ஜன., 26ல் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் ரிலீஸாகிறது.