மரகதநாணயம் 2 படம் தொடங்கியது | கில்லி மீண்டும் ரீ ரிலீஸ் ஆகிறது : மங்கத்தா சாதனையை முறியடிக்குமா? | இனி காமெடி படம் மட்டுமே...? இயக்குனர் பொன்ராம் முடிவு | சிவகார்த்திகேயனின் ‛சேயோன்' | பூவே உனக்காக படம் பிரசாந்த் நடிக்க வேண்டியதா? | இயக்குனர் விஜய்க்கு மறுவாழ்வு தருமா 'காதல்' | இப்ப வருமோ…எப்ப வருமோ….'ஜனநாயகன்' | இயக்குனர்கள் அடிமையாக இருக்கக் கூடாது : புது நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் ஆர்கே செல்வமணி பேச்சு | பா.ஜ., தலைவரின் பேச்சுக்கு திரிஷா கண்டனம் : வருத்தம் தெரிவித்த நயினார் நாகேந்திரன் | பிப்ரவரி 13 ரிலீஸ் படங்கள் : இன்றைய நிலவரம் என்ன ? |

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என பல படங்களை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். அடுத்து ரஜினியின் 171வது படத்தை இயக்கப் போகிறார். அதன்பிறகு விக்ரம் படத்தில் இடம்பெற்ற ரோலக்ஸ் கேரக்டரை பிரதானமாக வைத்து சூர்யாவை வைத்து அடுத்த படத்தை இயக்க அவர் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்நிலையில் ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜ் அது குறித்து கூறுகையில், ரஜினி நடிக்கும் படத்திற்கு பிறகு கார்த்தி நடிப்பில் கைதி- 2 படத்தை இயக்கப் போகிறேன். அதன்பிறகு தான் சூர்யா நடிப்பில் ரோலக்ஸ் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறியவர், கைதி படம் ஒரு கேம் சேஞ்ஜிங் படமாக இருந்தது. அதைவிட கைதி-2 படம் இன்னும் ஸ்ட்ராங்கான கதையில் உருவாகிறது என்றும் தெரிவித்தார்.




