'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? | அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ் | கார்த்திகை தீபம் சீரியலிலிருந்து விலகிய அயுப் |
விஜய், த்ரிஷா மற்றும் பலர் நடித்து அக்டோபர் 19ம் தேதி வெளிவந்த படம் 'லியோ'. இப்படம் ஒரு வாரத்தில் 461 கோடி வசூலித்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். அதன்பின் கடந்த மூன்று நாட்களில் இப்படம் 39 கோடியை வசூலித்து தற்போது 500 கோடியைக் கடந்துள்ளதாக சமூக வலைதளங்களில் டிரெண்டிங் செய்து வருகிறார்கள். பத்து நாட்களில் 500 கோடி வசூலைத் தொட்ட முதல் தமிழ்ப் படம் என விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
கேரளாவில் 50 கோடி, கர்நாடகாவில் 50 கோடி, தெலங்கானா, ஆந்திராவில் 42 கோடி, ஹிந்தியில் 25 கோடி வசூலைக் கடந்துள்ளது என்றும் தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் 150 கோடி வசூலையும், இதர தென்னிந்திய மாநிலங்களில் 140 கோடி வசூலையும், ஹிந்தியிலும் சேர்த்து இந்திய அளவில் 315 கோடியும், வெளிநாடுகளில் 185 கோடி வசூலையும் பெற்று 500 கோடி வசூலைக் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் அதிகாரப்பூர்வமற்ற தகவல் பரவியுள்ளது.
தமிழில் இந்த ஆண்டில் 500 கோடி வசூலைக் கடந்துள்ள இரண்டாவது தமிழ்ப் படம் இது. இதற்கு முன்பு ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' படம் 500 கோடி வசூலைக் கடந்துள்ளது. மற்ற தென்னிந்திய மொழிகளில் இந்த வருடங்களில் வெளியான படங்கள் எதுவும் 500 கோடியைக் கடக்கவில்லை. தமிழில் இரண்டு படங்கள் கடந்து சாதனையைப் படைத்துள்ளது.