அமெரிக்காவில் ஏப்., 9ல் குட் பேட் அக்லி பிரீமியர் காட்சி | முதல் கடார் என் சினிமாவை மூடியது... இண்டாவது கடார் திறந்து வைத்தது : சன்னி தியோல் | அண்ணன் கடனை என்னால் அடைக்க முடியாது: கோர்டில் நடிகர் பிரபு தகவல் | பிளாஷ்பேக்: சமகாலத்தில் எடுக்கப்பட்டு சாதனையையும், வேதனையையும் சந்தித்த இரண்டு “ஞானசௌந்தரி”கள் | 'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா | 'டிமான்டி காலனி 3' பணியில் அஜய் ஞானமுத்து! | ரூ.25 கோடிக்கு பிஸ்னஸ் ஆன 'பேடி' பட ஆடியோ உரிமை | உடை மாற்றும் போது அத்துமீறிய இயக்குனர்! - ஷாலினி பாண்டே | 'ரெய்டு 2' படத்தில் சிறப்பு பாடலில் தமன்னா! | 'சாரி' கவர்ச்சி படமல்ல, கருத்து படம்: ராம் கோபால் வர்மா |
'நாயகன்' படத்திற்குப் பிறகு கமல்ஹாசன், இயக்குனர் மணிரத்னம் இருவரும் இணைந்து பணியாற்ற உள்ள படத்தின் வேலைகள் ஆரம்பமாகிவிட்டன. கமல்ஹாசனின் 234வது படமாக உருவாக உள்ள அப்படம் பற்றிய அதிகாரப்பூர்வத் தகவலையும் வெளியிட்டுவிட்டார்கள்.
படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார்கள். ஆனால், படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், நடிகைகள் யார் என்பதை இன்னும் அறிவிக்கவில்லை. இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. படத்தில் நடிப்பதற்காக நயன்தாரா 12 கோடி சம்பளம் கேட்டதாகவும் அதற்கு சம்மதித்து ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் சொல்கிறார்கள்.
அது உண்மை என்றால் தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் முதல் நடிகை என்ற பெயரைப் பெறுவார் நயன்தாரா. அதிகபட்சமாக 5 கோடி சம்பளம் வாங்கி வந்த நயன்தாரா 'ஜவான்' வெற்றிக்குப் பிறகு சம்பளத்தை இரு மடங்காக உயர்த்திவிட்டாராம். 'ஜவான்' படம் மூலம் நயன்தாரா ஹிந்தியிலும் பிரபலமாகிவிட்டதால் கமல்ஹாசன் 234 படத்தின் பான் இந்தியா வெளியீட்டிற்கு அது உதவும் என்பதும் ஒரு காரணம் என்கிறார்கள்.